போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த விவகாரம்: தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கை
ஆரணியை அடுத்த பத்தியாவரம் சூசைநகர் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவனின் சான்றிதழை போலியாக தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பத்தியாவரம் சூசைநகர் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவனின் சான்றிதழை போலியாக தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் குழந்தைஅருள் மற்றும் காவலர் மேத்யூசுக்கு மெமோ வழங்கப்பட்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கபட்டுள்ளன. பதிவறை எழுத்தர் இருதயராஜ் மற்றும் அலுவலக உதவியாளர் பாபு ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கணினி உதவியாளர் தேவன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story