குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை : மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல்
அரசு தரப்பில் தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை என்றும், தம்மை விடுவிக்க வேண்டும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம், தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலாதேவி,உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முன்னதாக, வழக்கிலிருந்து விடுவிக்க கோரி உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், நிர்மலா தேவி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக, செவ்வாய்க்கிழமை 3 பேரும் மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும், அன்றைய தினமே, மனு மீதான விசாரணை நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
Next Story