ரயிலில் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? - போலீசாரிடம் நடித்துக் காட்டிய கொள்ளையர்கள்
சேலம் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி என சம்பவ இடத்தில் கொள்ளையர்கள் போலீசாரிடம் நடித்து காட்டினர்.
* கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி, சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு 5 கோடியே 78 லட்ச ரூபாய் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களில் 5 பேரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
* அப்போது ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு முன்பாகவே பணத்தை செலவழித்து விட்டதாக அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கொள்ளை நடந்ததாக கூறப்படும் சின்னசேலம், விருத்தாச்சலம் ரயில் நிலையங்களுக்கு கொள்ளையர்களை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது பணத்தை கொள்ளையடித்தது எப்படி என அவர்கள் போலீசாரிடம் நடித்துக் காட்டினர். மேற்கூரையை உடைத்து பணத்தை கொள்ளையடித்ததை அவர்கள் நடித்து காட்டியதை போலீசார் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்...
Next Story