சர்கார் பேனர் - ரசிகர்கள் மீது வழக்கு

சர்கார் பேனர் விவகாரம் தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சர்கார் பேனர் - ரசிகர்கள் மீது வழக்கு
x
* திருச்சி மாவட்டம் மணப்பாறை, துறையூரில் வைக்கப்பட்டிருந்த சர்கார் பட பேனர்களை காவல்துறையினர் அகற்றினர். பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்ததாக கூறி விஜய் மக்கள் இயக்க நகர தலைவர் லட்சுமிபாலன் உள்பட 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.  

* இதேபோல், நாகையில், அனுமதியின்றி சர்கார் பேனர் வைத்ததாக விஜய் ரசிகர்கள் 20 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அனுமதிபெற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை காவல்துறையினர் அகற்றியதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

* திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனுமதியின்றி பேனர் வைத்ததாகக் கூறி விஜய் ரசிகர்கள் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

* கும்பகோணத்திலும் சர்கார் பட பேனர்களை காவல்துறையினர் அகற்றினர். இது தொடர்பாக கிழக்கு மற்றும் மேற்கு காவல்நிலையத்தில், விஜய் ரசிகர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர், திருவாரூர் 

* அதிமுக போராட்டத்தை தொடர்ந்து, தஞ்சாவூரில் இரு திரையரங்குகளில் சர்கார் பட காட்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அனுமதியின்றி பேனர் வைத்தாகக் கூறி விஜய் ரசிகர்கள் 

* 25 பேர் மீது தஞ்சாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல், திருவாரூர் மாவட்டத்திலும் அனுமதியின்றி சர்கார் படத்திற்கு பேனர் வைத்ததாக 21 விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பேனர் கிழித்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படாததால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்