ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை : பார்சி மொழியில் பேசி போலீசாரை திணறடிக்கும் கொள்ளையர்கள்?
ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ஐந்தே முக்கால் கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எந்த தகவலையும் தெரிவிக்காமல், சிபிசிஐடி போலீசாரை திணறடித்து வருகின்றனர்.
சேலத்திலிருந்து சென்னை சென்ற ரயிலில் பெட்டியின் மேற்கூரையை துளையிட்டு 5 கோடியே 78 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக நீண்ட நாட்கள் துப்பு துலங்காமல் இருந்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற அனுமதியுடன் 5 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 10 நாட்கள் விசாரணை நடத்தியும் கொள்ளையர்கள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. பிடிபட்ட கொள்ளையர்களுக்கு இந்தி தெரிந்தாலும், பார்சி மொழியில் பேசி, போலீசாரை திசை திருப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொள்ளையர்களில் ஒருவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் அவன் பொய் சொன்னதும் தெரிய வந்துள்ளது. காவலில் வைத்து விசாரிக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கொள்ளையர்களிடமிருந்து தகவல்களை பெறுவது சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story