கிராமங்களுள் யானைகள் புகுவதை தடுக்க நடவடிக்கை - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

கிராமங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிராமங்களுள் யானைகள் புகுவதை தடுக்க நடவடிக்கை - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
x
திண்டுக்கல் மாவட்டத்தில் யானைகள் நடமாட்டத்தை தடுக்க வலியுறுத்தி, கோகுல கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனப்பகுதியில் நாட்டு கருவேல மரம், சீமை கருவேல மரம் போன்ற ஆபத்தான மரங்கள்  அதிகரித்துள்ளதால், உணவு தேடி யானைகள் ஊருக்குள் நுழைந்து விடுவதாகவும், இதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், 
யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், அந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்