கோயம்பேட்டில் அலைமோதிய கூட்டம் : முன்பதிவு பேருந்துகள் தாமதம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் வசிப்போர் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் வசிப்போர் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். சனி ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்றிரவு முதலே பலர் சொந்த ஊர் செல்லத் துவங்கினர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதையடுத்து, எந்தப் பேருந்து எந்த நடைமேடையில் இருக்கிறது, அவை எங்கு செல்கிறது என ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. பயணிகளின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக அனைத்து நடைமேடைகளிலும் விசாரணை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்பதிவு செய்த அரசு பேருந்துகள் தாமதமாக வருவதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.
Next Story