தீபாவளி பண்டிகை புதுவரவு : பாட்டிலி டிசைன் பட்டுப் புடவைகள்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது...
தீபாவளி பண்டிகை புதுவரவு : பாட்டிலி டிசைன் பட்டுப் புடவைகள்
x
தீபாவளி பண்டிகைக்கான ஷாப்பிங் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நேரம் இது.. மாதச் சம்பளத்தை வாங்கிய பிறகு ஷாப்பிங் செல்லலாம் என காத்திருந்தவர்கள் இப்போது கடைகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள் அந்த வரிசையில் ஈரோடு ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. பொதுவாக மற்ற இடங்களில் இருப்பதை காட்டிலும் கட்டுக்கடங்காத கூட்டம் ஜவுளி சந்தையில்  காணப்படுவதற்கு காரணம் எல்லா பொருட்களும் இங்கு மொத்தமாக மலிவாக கிடைக்கும் என்பது தான்..
ஈரோட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் உடைகள் எல்லாம் இங்கு மொத்த விலையில் மலிவாக கிடைப்பதால் பல மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து வாங்கிச் செல்வதுண்டு..இந்த ஆண்டு தீபாவளிக்கு புதுவரவாக கை வேலைப்பாடுகள் நிறைந்த பாட்டிலி டிசைன் பட்டுப் புடவைகள், ஆரி வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப் புடவைகள் என ஏகப்பட்ட மாடல்கள் வந்திருக்கிறது.. 

ஈரோட்டின் பிரதான பகுதியில் நடக்கும் இந்த ஜவுளி சந்தையில் பெருந்திரளாக மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.. ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புதுவரவு உடைகள் கிடைக்கும் இடம் இது. மேலும் உள்ளாடைகளும் குறைவான விலையில் கிடைக்கும் என்பதால் தீபாவளியை காரணமாக வைத்து ஒரு ஷாப்பிங் டூர் வருவதையே மக்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.இங்கு தயாரிக்கப்படும் உடைகள் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் உடைகள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. விதவிதமான ஜீன்ஸ் பேன்ட்கள், பாரம்பரியம் கொண்ட வேட்டி ரகங்கள் என எல்லாம் இங்கு கிடைப்பதும் ஜவுளி சந்தையின் சிறப்பாக இருக்கிறது.. 



Next Story

மேலும் செய்திகள்