மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் : நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் குறிப்பிட்ட சில சாட்சிகளை தவிர மற்றவர்களை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* வழக்கு விசாரணையை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட மகளிர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மகளிர் நீதிமன்ற நீதிபதி லியாகத் அலி முன்பு விசாரணைக்கு வந்த போது 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
* இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மொத்தமுள்ள 145 சாட்சிகளில் 2 முதல் 32 வரை உள்ள சாட்சிகளாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இருப்பதாகவும், அவர்களை மூடிய நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றார்.
* ஒன்றாவது மற்றும் 33வது சாட்சி மற்றும் அதற்கு அடுத்துள்ள சாட்சிகளை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Next Story