ரயிலில் தண்ணீர் நிரப்பாததால் 10 மணி நேரமாக பயணிகள் அவதி...

ரயில் கழிவறையில் தண்ணீர் இல்லை என கூறி ஓடும் ரயிலை பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய சம்பவம் ஈரோடு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரயிலில் தண்ணீர் நிரப்பாததால் 10 மணி நேரமாக பயணிகள் அவதி...
x
ரயில் கழிவறையில் தண்ணீர் இல்லை என கூறி  ஓடும் ரயிலை பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய சம்பவம் ஈரோடு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற விரைவு ரயிலில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். ரயில், ஜோத்பூர் வந்தபோதே தண்ணீர் முழுவதும் காலியானதா கூறப்படுகிறது. பின்னர் சுமார் 10 மணிநேரம் ரயிலில் தண்ணீர் இன்றி பயணிகள் தவித்துள்ளனர்.  இதனையடுத்து ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்த போது ஆத்திரமடைந்த பயணிகள் பிளாட்பாரத்தில் ரயில்வே துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அனைத்து பெட்டிகளிலும் தண்ணீர் நிரப்பபட்டது. பயணிகள் வாக்குவாதம் காரணமாக, அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. 

Next Story

மேலும் செய்திகள்