முன்கூட்டியே தேர்தல் - நடத்தை விதிகள் என்ன?

பதவிக்காலம் முடிவதற்கு முன்பே சட்டப்பேரவை கலைக்கப்பட்டால், பொறுப்பு அரசுக்கு பொருந்தும் நடத்தை விதிகளை எவை என்பதை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்கூட்டியே தேர்தல் - நடத்தை விதிகள் என்ன?
x
* எஸ். ஆர். பொம்மை வழக்கில் தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், பொறுப்பு அரசு, அன்றாட நிர்வாகத்தை மட்டுமே கவனிக்க வேண்டும் என்றும், கொள்கை ரீதியான பெரிய முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் கூறியுள்ளதை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.  

* இயல்பான சட்டப்பேரவை தேர்தலின் போது பொறுப்பு அரசுக்கு உள்ள நடத்தை விதிகள், முன்கூட்டியே சட்டப்பேரவை கலைக்கப்படும் போதும் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மத்தியிலும், மாநிலத்திலும் பொறுப்பு அரசு அமையும் போது, புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கக்கூடாது என்றும், 

* அதிகாரப்பூர்வ பயணத்தை தேர்தல் பணியுடன் இணைப்பது, அரசு சார்ந்த எதனையும் அரசு சாராப் பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்பது உட்பட  அனைத்து விதிமுறைகளும்,  பொறுப்பு அரசில் உள்ள அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* மாநிலத்தில் மட்டுமின்றி மத்தியில், பொறுப்பு அரசு அமையும் போதும் இந்த விதிகள் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம்,

* மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொறுப்பு அரசு, நியாயமான, சுதந்திரமான, வெளிப்படையான தேர்தலை நடத்துமாறு கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்