அப்போது தன்னிடம் முருகன், ஒத்துழைப்பு கொடுக்கிற மாணவிகள் யாராவது இருக்கிறார்களா எனக், கேட்டதாகவும், தற்போது நிலவரம் சரியில்லை என்றும், இப்போது வேண்டாம் என கூறிவிட்டதாகவும் நிர்மலா தெரிவித்துள்ளார். தன்பின்னர், கடந்த மார்ச் மாதம் காமராஜர் பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சியில் சேருவதற்கான உத்தரவு வந்ததாகவும், அப்போது முருகனை சந்திக்கும்போது, கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா என, அவர் கேட்டதாகவும் நிர்மலா தேவி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து முருகன், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கருப்பசாமியை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், பின்னர் அவருடனும் உறவு இருந்ததாகவும் நிர்மலா தேவி பகிரங்கமாக தெரிவித்துள்ளார். முருகன், கருப்பசாமி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தியதால், கல்லூரி மாணவிகளுக்கு செல்போனில் சூசமாக பல குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அதனை மேலும் 3 மாணவிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், நிர்மலா தேவி கூறியுள்ளார்.