அரிய வகை "பாம்பே O" ரத்தம் பெற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை : ஸ்டான்லி மருத்துவமனையில் சாதனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் "பாம்பே O" என்ற அரிய ரத்த வகையைச் சேர்ந்த ஒருவருக்கு ரத்த தானம் பெற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அரிய வகை பாம்பே O ரத்தம் பெற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை : ஸ்டான்லி மருத்துவமனையில் சாதனை
x
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் "பாம்பே O" என்ற அரிய ரத்த வகையைச் சேர்ந்த ஒருவருக்கு ரத்த தானம் பெற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த மெகர் ஜான் என்ற பெண்ணுக்கு அரிய வகை ரத்தமான "பாம்பே O" இருப்பது தெரிய வந்தது. இந்த வகை ரத்தம் 10 லட்சம் பேரில் 4 பேருக்கு மட்டுமே இருக்கக் கூடியது. இந்நிலையில், மெகர் ஜானுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக "பாம்பே O"ரத்த வகை குறித்து பல்வேறு வழிகளில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை விளம்பரம் செய்தது. இதையடுத்து, ஸ்ரீவத்ஸன் என்பவரது ரத்த வங்கியில் இருந்து 4 பேர் அவருக்கு ரத்ததானம் அளித்தனர். அதன் பிறகு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்