தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது - உச்சநீதிமன்றம்

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது - உச்சநீதிமன்றம்
x
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்றம், தீபாவளி பண்டிகையின்போது இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரியும், பட்டாசு வெடிக்க கூடுதல் நேரத்தை ஒதுக்கக் கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளது. மேலும், பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே தீர்மானித்து கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த பட்டாசு விற்பனையாளர்கள், 2 மணி நேரம் என்பதை ஏற்கவே முடியாது என்றும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்