நூலிழை தொழிற்சாலையில் இருந்து ரசாயனக்கழிவு வெளியேற்றம்
கரூர் அருகில் காக்காவாடி பகுதியில் பழைய பிளாஸ்டிக்கிலிருந்து செயற்கை நூலிழை தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து, ரசாயனக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நிலரப்பரப்பில் வெளியேற்றுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.
கரூர் அருகில் காக்காவாடி பகுதியில் பழைய பிளாஸ்டிக்கிலிருந்து செயற்கை நூலிழை தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து, ரசாயனக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நிலரப்பரப்பில் வெளியேற்றுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். தகவறிந்த வெள்ளியணை காவல் நிலையப் போலீசார் மற்றும் கரூர் வட்டாட்சியர், மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆகியோர் தொழிற்சாலையை ஆய்வு செய்து, தொழிற்சாலை உற்பத்தியை நிறுத்தும்படி உத்தரவிட்டனர். கழிவு நீர் சுத்திகரிக்கும் இயந்திரங்களை முறையாக அமைத்து பின்னர், தொழிற்சாலையை இயக்கும்படி அறிவுறுத்தினார்.
Next Story