"ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு காற்றில் வேதிப் பொருட்களின் அளவு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது" - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு, அப்பகுதியில் காற்று மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் நியமிக்கப்பட்ட குழுவிடம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்துள்ளது.அதில், தூத்துக்குடியில் உள்ள 8 இடங்களில் சேகரிக்கப்பட்ட காற்று மாதிரிகளில், 5 மைக்ரோ கிராமிற்கும் குறைவாக ஸ்குசல்ஃபர்-டை-ஆக்சைடு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Nitrogen-di-oxide-யின் அளவு 7 மைக்ரோ கிராமிற்கும் குறைவாக இருப்பதாகவும், காற்றில் உள்ள துகள்களின் அளவு 64.9 மைக்ரோ கிராமாக இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கண்டறியப்பட்ட அளவை விட இந்த அளவு, குறைவு என்றும், இரண்டு ஆய்வு முடிவுகளையும் ஒப்பிடும் போது, காற்றில் வேதிப் பொருட்களின் அளவு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story