மது குடிக்க பணம் தர மறுத்ததால் தாயை வெட்டிக்கொன்ற மகன்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மது குடிக்க பணம் தரமறுத்த தாயை, அவருடைய மகன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
* கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மது குடிக்க பணம் தரமறுத்த தாயை, அவருடைய மகன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருகுவிளை பகுதியை சேர்ந்த குமார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததால், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.
* இந்த நிலையில், மது குடிப்பதற்காக தாய் தங்கத்திடம் பணம் கேட்டபோது, கொடுக்க மறுத்ததால், கம்பியால் தலையில் தாக்கி அரிவாளால் கழுத்தில் வெட்டினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்துவந்த வடசேரி போலீசார், குமாரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story