முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா தொடங்கியது
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 111 வது ஜெயந்தி விழா மற்றும் 56 வது குருபூஜை விழாவின் முதல் நாளான நேற்று ஆன்மீக விழா, அதிகாலை 5.15 மணிக்கு பிள்ளையார்பட்டி பிச்சை குருக்களின் யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 111 வது ஜெயந்தி விழா மற்றும் 56 வது குருபூஜை விழாவின் முதல் நாளான நேற்று ஆன்மீக விழா, அதிகாலை 5.15 மணிக்கு பிள்ளையார்பட்டி பிச்சை குருக்களின் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இரண்டாவது நாளான இன்று அரசியல் விழாவும் , நாளை அரசு விழாவாகவும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுகளில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனி;ச்சாமி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க ., காங்கிரஸ், அ.ம.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி, சமூதாய, ஆன்மீக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனையொட்டி, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Next Story