"18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் - மத்திய அரசுக்கு தொடர்பில்லை" - பொன். ராதாகிருஷ்ணன்
18 சட்டமன்ற உறுப்பினர்கள், தகுதி நீக்க விவகாரத்தில், மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
18 சட்டமன்ற உறுப்பினர்கள், தகுதி நீக்க விவகாரத்தில், மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை அருகே கட்டப்பட்டு உள்ள புல்வாய்க்கரையில் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்தை இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்றிருப்பது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
Next Story