கணவன் கள்ளத் தொடர்பு மனைவியை துன்புறுத்தியதாக கருத முடியாது
கள்ளத் தொடர்பு காரணமாக மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சேலத்தை சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
* கள்ளத் தொடர்பு காரணமாக மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சேலத்தை சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
* சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும், சங்கீதா என்பவருக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரோஷினி என்ற பெண் குழந்தை இருந்தது.
* இந்நிலையில், மாணிக்கத்திற்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் மனமுடைந்த சங்கீதா தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
* இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், மாணிக்கத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2007 ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதனை ரத்து செய்ய கோரி மாணிக்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், கள்ள தொடர்பு மனரீதியாக துன்புறுத்திய குற்றமாக கருத முடியாது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
* தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டுகளை காவல்துறை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி, மாணிக்கத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
Next Story