தங்கம் விலை 1 மாதத்தில் மட்டும் சவரனுக்கு ரூ. 1000 உயர்வு
தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பண்டிகை சீசன் துவங்கியுள்ளதை தொடர்ந்து தங்கத்தின் விற்பனை அதிகரித்து வருகிறது. தேவை அதிகரித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இம்மாத துவக்கத்தில் 2 ஆயிரத்து 915 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் தற்போது 3 ஆயிரத்து 52 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 96 ரூபாய் அதிகரித்து 24 ஆயிரத்து 416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே காலத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து 41 ரூபாய் 70 காசுகளாக உள்ளது. தீபாவளி பண்டிகை மற்றும் தொடர்ந்து வரும் திருமண சீசன் ஆகிய காரணங்களால் தேவை அதிகரித்துள்ளதால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவி்த்துள்ளனர்.
Next Story