நிர்மலா தேவி வழக்கு - புதிய மனுதாக்கல்
நிர்மலா தேவி விவகாரத்தில் சாட்சிகளிடம் திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் தரப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
* அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைகழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய மூன்று பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
* இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் மூடிய நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 3-ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
* இதற்கு எதிர்த்து தெரிவித்து திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என கருப்பசாமி மற்றும் முருகன் தரப்பில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.
* இது மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரையும் வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆஜர்படுத்த மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story