தீபாவளிக்கு சிறுமிகளின் உடையில் புதுவரவு என்ன..?

தீபாவளி பண்டிகைக்கு சிறுமிகளின் ஆடைகளில் புதிதாக என்ன வந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
தீபாவளிக்கு சிறுமிகளின் உடையில் புதுவரவு என்ன..?
x
பண்டிகைகள் என்றதும் உற்சாகம் தொற்றிக் கொள்வது குழந்தைகளிடம் தான். குழந்தைகளை மேலும் அழகாக்கும் வகையில் இந்த ஆண்டு தீபாவளி புதுவரவாக வந்திருக்கிறது வண்ணமயமான உடைகள்.

பொதுவாக பெண் குழந்தைகளுக்கு உடைகள் அணிவித்து மகிழ்வதென்பது பெரியவர்களுக்கு கொள்ளை ஆசையாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்காகவே இந்த ஆண்டு க்யூட் ஆன உடைகள் சந்தைகளில் வலம் வந்திருக்கிறது.கான்ட்ராஸ்ட் கலர்களில் பட்டுப்பாவாடைகள், பல அடுக்குகளில் ஃப்ரில் வைத்த கவுன்கள், கல் வேலைப்பாடுகள் கொண்ட லெஹங்கா, சுடிதார் வகைகள், ஜமிக்கி வேலைப்பாடுகள் கொண்ட லாங் கவுன்கள் என இந்த ஆண்டு தீபாவளி குழந்தைகளுக்கு அசத்தல் தான்.

ஸ்மைலி, மிமி, சாக்கோபை, லாபெல்லா என விதவிதமான பெயர்களில் இந்த ஆண்டு சிறுமிகளுக்கென பல ஆடைகள் வந்திருக்கிறது. பெரியவர்களுக்கு இருப்பதை போலவே மஸ்தானி உடைகளும் இந்த ஆண்டு சிறுமிகளுக்கு க்யூட் காம்பினேஷனில் வந்திருக்கிறது. விழாக்களுக்கு செல்லும் போது இந்த உடைகளை அணிந்து சென்றால் கால் முளைத்த தேவதையாகவே  குழந்தைகள் வலம் வருவார்கள்.பாரம்பரியம் விரும்புவோருக்கு ஏற்ற பட்டுப்பாவாடைகளிலும் எம்ப்ராய்டரில் வேலைப்பாடுகளை கொண்டு வந்து கலக்கலாக சந்தைப்படுத்தியிருக்கின்றனர். 

குழந்தைகளின் விருப்பம் அறிந்து அவர்களுக்கு ஏற்ற உடைகளை வாங்கி தருவதில் பெற்றோருக்கு ஏற்படும் மனநிறைவு அதிகம். பட்ஜெட்டை பதம் பார்க்காத வகையிலான உடைகளும் இந்த ஆண்டு சந்தைக்கு வந்திருக்கிறது என்பது சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் தான். 


Next Story

மேலும் செய்திகள்