போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் பேரின் லைசென்ஸ்களுக்கு தடை
சென்னையில், போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் பேரின் லைசென்ஸ்களுக்கு தடைவிதிக்க, போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
* சென்னையில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
* அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக இரண்டாயிரத்து 917 பேர் மீதும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக பத்தாயிரத்து 651 பேர் மீதும், அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதாக ஒன்பதாயிரத்து 664 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
* போலீஸ் இல்லை என்பதை அறிந்து, சிக்னலை மதிக்காமல் சென்ற 29 ஆயிரத்து 32 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
* இதையடுத்து, போக்குவரத்து விதிகளை மீறிய 61 ஆயிரத்து 504 பேரின் லைசன்ஸ்களுக்கு தற்காலிக தடை விதிக்க ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு, சென்னை போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
Next Story