பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேகபயிற்சி முகாம் - கைவினை பொருட்கள், பாரம்பரிய கலைகள் பயிற்சி

பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் நோக்கிலும், மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கவும் திருவண்ணாமலையில், பள்ளி மாணவர்களுக்கான கைவினை பொருட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேகபயிற்சி முகாம் - கைவினை பொருட்கள், பாரம்பரிய கலைகள் பயிற்சி
x
* பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் நோக்கிலும், மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கவும் திருவண்ணாமலையில்,  பள்ளி மாணவர்களுக்கான கைவினை பொருட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது வருகிறது.

* இந்த பயிற்சி முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து  கொண்டுள்ளனர். 

* களிமண்ணால் மண்பாண்டம் செய்தல், கருங்கற்களை கொண்டு கலை நயத்துடன் சிற்பங்கள் வடிவமைத்தல், பனை ஓலையை கொண்டு கூடை செய்தல் உள்ளிட்ட பயிற்சிகள் மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்படுகின்றன. 

* இதே போல், பாரம்பரிய நடனம் கோளாட்டம், பறை இசை போன்ற கலைகளும் தகுந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

* இதனை திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி மகிழேந்தி மற்றும் சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் பார்வையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்