லாரி என்ஜின் பழுது - சென்னையில் நடு சாலையில் ரூ 2,000 கோடி
சென்னைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டுக்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி பழுது காரணமாக நள்ளிரவில் சாலையில் ஒருமணி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
* மைசூரிலிருந்து 2 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை ஏற்றி கொண்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு சென்ற கண்டெய்னர் லாரி நேற்றிரவு அமைந்தகரை பகுதியில் திடீரென பழுதாகி நின்றது.
* கியர் பாக்சில் ஏற்பட்ட பழுது உடனடியாக சரிசெய்ய முடியாததால் சாலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பணத்துடன் கண்டெய்னர் லாரி நின்றது. இதனை அறிந்து பொதுமக்கள் அங்கு ஆர்வமுடன் கூடினர்.
* தகவறிலறிந்த போலீசார் அங்கு விரைந்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். லாரிக்கு பாதுகாப்பாக வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பணம் இருந்த கண்டெய்னரை யாரும் நெருங்காமல் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் மீட்பு வேன் வரவைக்கப்பட்டு, கண்டெய்னர் லாரி ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது . இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story