ரூ 250 ஆக உயர்ந்த கறிக்கோழி : விற்பனை சரிந்ததால் இன்று ரூ.11 விலை குறைப்பு
தமிழகத்தில் கறிக்கோழி தேவை அதிகரித்து உள்ளதால், ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கறியுன் விலை 250 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கறிக்கோழி தேவை அதிகரித்து உள்ளதால், ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கறியுன் விலை 250 ரூபாயாக அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் நுகர்வு குறைந்ததால், தாய் கோழி உற்பத்தியை 20 சதவீதம் வரை உற்பத்தியாளர்கள் குறைத்துக் கொண்ட நிலையில், -புரட்டாசி விரதம் முடிந்ததும் கறிக்கோழி ,நுகர்வு அதிகரித்து உள்ளது. இதனால் கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் கிலோ ரூ 50 ஆக இருந்த பண்ணை மொத்த விலை ரூ 116 ஆகவும், சில்லறை விற்பனை விலை 130 ல் இருந்து கிலோவுக்கு ரூ 250 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு அசைவ பிரியர்களை அதிச்சியடைய செய்த நிலையில், கறிக்கோழி விற்பனை சரிந்ததால் இன்று பண்ணை கொள்முதல் விலை ஒரு கிலோவுக்கு 11 ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story