மீடூ பாலியல் புகார் :7 கர்நாடக இசைக்கலைஞர்கள் நீக்கம்

மீடூ இயக்கத்தின் வாயிலாக, பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட 7 கர்நாடக இசைக்கலைஞர்களை வருகிற டிசம்பர் மாத இசைக்கச்சேரி செய்யும் குழுவிலிருந்து நீக்கி சென்னை மியூசிக் அகாடமி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மீடூ பாலியல் புகார் :7 கர்நாடக இசைக்கலைஞர்கள் நீக்கம்
x
மீடூ இயக்கத்தின் வாயிலாக, பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட 7 கர்நாடக இசைக்கலைஞர்களை வருகிற டிசம்பர் மாத இசைக்கச்சேரி செய்யும் குழுவிலிருந்து நீக்கி சென்னை மியூசிக் அகாடமி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இது குறித்த வெளியிடப்பட்ட அறிக்கையில் சித்ரவீணை இசைக்கலைஞர் ரவிகிரண், ஓ.எஸ்.தியாகராஜன், மன்னார்குடி ஏ.ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், நாகை ஸ்ரீராம், ஆர். ரமேஷ் மற்ளறும் திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோருக்கு வருகிற மார்கழி மாத இசை கச்சேரிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த 7 பேர் மீது, பாலியல் புகார்கள் வந்ததாகவும், அதன் அடிப்படையில் தீர விசாரணை செய்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் கர்நாடக இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து, பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படும் வகையில் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில், பிரபல கர்நாடக பாடகர்கள் ரஞ்சனி, காயத்ரி, டி.எம்.கிருஷ்ணா, ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். இதன் பிறகே, மியூசிக் அகாடமி இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்