"தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்" : பட்டாசு விற்பனை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் வேதனை
நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்து உச்ச நீதிமன்றம்.
நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தீபாவளியன்று இரவு 2 மணி நேரமும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று இரவு 35 நிமிடமும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், பட்டாசு தொழில் வெகுவாக பாதிக்கப்படும் என சிவகாசியை சேர்ந்த பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story