மாவோயிஸ்ட் தாக்குதலை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை

தமிழக, கேரள வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு, மாவோயிஸ்ட்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அதிரடிப் படையினர் சிறப்பு பயிற்சி அளித்தனர்
மாவோயிஸ்ட் தாக்குதலை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை
x
* தமிழக, கேரள வனப்பகுதியில்  வேட்டை தடுப்பு காவல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு, மாவோயிஸ்ட்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அதிரடிப் படையினர் சிறப்பு பயிற்சி அளித்தனர். 

* கேரள மாநிலம் கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்கள்  இணையும் பகுதியில் தாமரைச்சேரி அருகே சுகந்தகிரி என்ற பழங்குடியின மக்கள் வசித்து வரும் கிராமம் உள்ளது. 

* இந்த பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சிலநாட்களுக்கு முன்பு ரோந்து சென்ற வனத்துறையினரை மாவோயிஸ்ட்டுகள் சிறைபிடித்ததோடு, அவர்களிடம் இருந்த பணம், செல்போன், சார்ஜர், பவர்பேங் போன்றவற்றை பறித்துக் கொண்டு ஒருமணி நேரம் கழித்து விட்டுள்ளனர்.   

* இதுகுறித்து தாமரைச்சேரி போலீசாருக்கு வனத் துறையினர் தகவல் அளித்தனர். தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் தற்போது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே வனப்பகுதியில் ரோந்து செல் கூடிய வேட்டை தடுப்பு காவலர்களுக்கு, அதிரடிப் படையினர் முலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 

* இதில் கை எறிகுண்டு வீசுதல், பலவகையான துப்பாக்கிகளை கையாளும் முறை, நக்சல்கள் தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள வேண்டிய தற்காப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்