ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் என புகார்
ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை கண்டித்து நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் ஒரு அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பான நிலை உருவானது.
* விழா மற்றும் விடுமுறை காலங்களில் வழக்கமான கட்டணத்தை விட 2 அல்லது 3 மடங்கு கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* வழக்கமான சென்னைக்கு ஆயிரத்து 300 ரூபாய் வரை வசூலிக்கும் நிலையில், தற்போது 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
* இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைபை சேர்ந்த ஜான் விக்டர் தாஸ், விமான கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாகவும், இதனை அதிகாரிகள் தடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
* பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
Next Story