தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு
x

தஞ்சை பெரிய கோவில் உள்ள 41 சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் இந்த குழுவினர் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் சிலை கடத்தல் ஏடிஎஸ்பி ராஜாராமன்,  தென்மண்டல தொல்லியல் துறை இயக்குனர் நம்பிராஜன் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் சிலைகளின் உறுதித்தன்மை  குறித்து நேற்று சுமார் 8 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பழமையான ராஜராஜன் சோழன் சிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.



தஞ்சை பெரிய கோயிலில் 46 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டது - நம்பிராஜன், தொல்லியல்துறை 


Next Story

மேலும் செய்திகள்