ஜோத்பூர் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் தீவிர சோதனை
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஜோத்பூர் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கை, ஜோத்பூர் விரைவு ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக கடிதம் ஒன்று வந்தது. அதில் ஒரு தீவிரவாத அமைப்பின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீசார், ஜோத்பூர் விரைவு ரயிலை எண்ணூரில் நிறுத்தி, அதிலிருந்த பயணிகளை வேறொரு ரயிலுக்கு மாற்றி சென்ட்ரல் அழைத்து வந்தனர். பின்னர் அந்த ரயில் எழும்பூர் ரயில்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய்கள் ஆய்வு நடத்தினர். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. முழு ஆய்வுக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.
Next Story