பெரிய கோயிலில் 41 சிலைகள் மாற்றமா? - சிலைகள் தொன்மை குறித்து தொல்லியல் துறை ஆய்வு

தஞ்சை பெரிய கோயிலில், மாற்றப்பட்டதாக புகார் எழுந்த 41 சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பெரிய கோயிலில் 41 சிலைகள் மாற்றமா? - சிலைகள் தொன்மை குறித்து தொல்லியல் துறை ஆய்வு
x
தஞ்சாவூர் பெரியகோயில் அர்த்த மண்டபத்தில் வைத்து பராமரிக்கப்படும் 41 சிலைகள் மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு 3 கட்டங்களாக கோயிலில் ஆய்வு நடத்தியது. ஏடிஎஸ்பி ராஜாராம், தலைமையிலான 20 பேர் கொண்ட குழு, 4ஆம் கட்டமாக இன்று தஞ்சை பெரிய கோயிலில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சிலைகளின் தொன்மை, உயரம், உலோகங்கள், முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பணியில் தொல்லியல்துறை நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகே, 41 சிலைகள் குறித்த உண்மை நிலவரம் தெரியவரும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்