தேயிலை தூளிலிருந்து ஒயின் தயாரிப்பு : இளைஞர்கள் புதிய முயற்சி

கோத்தகிரி பகுதியில் களைகட்டும் 'டீ ஒயின்' தயாரிப்பை குடிசை தொழிலாக தொடங்க மானியம் கிடைக்குமா என இளைஞர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தேயிலை தூளிலிருந்து ஒயின் தயாரிப்பு : இளைஞர்கள் புதிய முயற்சி
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தேயிலை விவசாயம் மிகவும் பிரதானமாக உள்ளது. இந்த  தேயிலைத்தூளில் இருந்து வேறு ஏதாவது தயாரிக்க முடியுமா? என்று ஜான்சிரில் உள்ளிட்ட இளைஞர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதன் பலனாக டீ ஒயின் தயாரிக்க முடியும் என்பதை அந்த இளைஞர்கள் நிரூபித்துள்ளனர். பெரிய அளவு முதலீடின்றி இதனை தொழிலாக செய்யலாம் எனக் கூறும் ஜான்சிரில், இதற்கு முறையான பயிற்சி மற்றும் மானியம் வழங்க  இந்திய தேயிலை வாரியம் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்