குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்
x
நிலத்தடி நீரை எடுக்க தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும், குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் முன்னிலையில் சென்னை - தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. எனவே, போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக தமிழ்நாடு குடிநீர் கேன் உற்பத்தியாளர் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

Next Story

மேலும் செய்திகள்