கல்யாண யோகத்தை வழங்கும் கோதண்டராமர் கோயிலின் சிறப்புகள்..

சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் காட்சி தருகிறது இந்த கோதண்டராமர் கோயில்.
கல்யாண யோகத்தை வழங்கும் கோதண்டராமர் கோயிலின் சிறப்புகள்..
x
* சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் காட்சி தருகிறது இந்த கோதண்டராமர் கோயில். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயில் என்பது இதன் சிறப்பு. இந்த கோயிலின் சிறப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ராமாயண காலத்திற்கு பயணப்பட வேண்டியது அவசியம். 

* 14 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துவிட்டு வந்த ராமபிரான், மலைப்பகுதிகளில் இருந்த ரிஷிகளிடம் ஆசி பெற சென்றுள்ளார். அப்போது 
தான் சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் தவமிருந்த பிருங்க ரிஷியை தேடி ராமபிரான் வந்துள்ளார். 

* தன்னை தேடி வந்த ராமபிரானிடம் பிருங்க ரிஷி முனிவர் 2 வரங்களை கேட்டுள்ளார். தன் நந்தவனத்தில் ராமபிரான் 2 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும், ராமர் பட்டாபிஷேகத்தை காண வேண்டும் என்றும் அன்பு கட்டளை இட்டுள்ளார். 

* ரிஷியின் கட்டளையை ஏற்ற ராமர், நந்தவனத்தில் தங்கியதாக வரலாறு கூறுகிறது. இதுகுறித்த வரலாறு ராமாயணத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. பட்டாபிஷேக காட்சியை ரிஷிக்கு காட்டும் விதமாக தான் தன் மடியில் சீதையை ஏந்தி காட்சி தருகிறார் இங்கு வீற்றிருக்கும் கோதண்டராமர்.

* திருமண கோலத்தில் சுவாமி காட்சி தரும் தலம் இது என்பதால் இங்கு வந்து வழிபட்டால் திருமண தடை விலகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. 

* கோயிலின் மூலவராக இருக்கும் ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு வந்து ராமரை வணங்கி அங்க பிரதட்சணம் செய்தால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகி திருமணம் கை கூடும் என்பதால் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகிறார்கள். 

* புரட்டாசி மாதம் நடக்கும் திருவிழாக்கள் மட்டுமின்றி ஆடி மாதத்தில் நடக்கும் ஊஞ்சல் சேவை, ஆடிப்பூரம் உள்ளிட்ட விழாக்கள் எல்லாம் இங்கு திருவிழா போல காட்சி தருகிறது. சென்னை வர்த்தக மையத்திற்கு எதிரே உள்ள கோயில் என்பதால் பக்தர்கள் வந்து செல்வதும் எளிதாகவே இருக்கிறது.. 


Next Story

மேலும் செய்திகள்