சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் ஆந்திராவை சேர்ந்த மஸ்தான் கான் என்பவரின் உடமைகளில் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ 700 கிராம் தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேர் மின் விசிறியில் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ 34 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் 3 கிலோ 40 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
Next Story