80 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு

செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 80 லட்சம் பேர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பதாக அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
80 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு
x
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், அவ்வப்போது ஏற்படும் காலி பணியிடங்களுக்கு தேர்வுகள் மூலமும், நேரடியாகவும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். 

இந்நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 80 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பதாக அரசின் புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது. பள்ளி மாணவர்கள் 20 லட்சம் பேர், கல்லூரி மாணவர்கள் 20 லட்சம் பேரும், 24 வயது முதல், 35 வயது வரை 27 லட்சம் பேரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். 

57 வயதைக் கடந்த நிலையிலும், அரசு வேலையை நம்பி 6 ஆயிரத்து 440 பேர் காத்திருக்கின்றனர் என்ற சுவாரஸ்ய தகவலும் அரசு இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதேபோல், மாற்றுத்திறனாளிகள் 1 லட்சத்து 27 ஆயிரம் பேரும் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். இதுவரை அரசு வேலையை நம்பி தமிழகத்தில் மட்டும் 79 லட்சத்து 62 ஆயிரத்து 826 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்