குருவித்துறை பெருமாள் கோயிலில் கடத்தப்பட்ட சிலைகள் மீட்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பெருமாள் கோயிலில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலைகள் திண்டுக்கலில் மீட்கப்பட்டது.
2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள், கோயிலில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 4 ஐம்பொன் சிலைகள் கடந்த 14ஆம் தேதி கடத்தப்பட்டது. இது தொடர்பாக கோயில் அர்ச்சகர் ரெங்கநாத பட்டர் காடுபட்டி காவல்துறையிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் கொள்ளையர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் விளாங்குடி என்ற இடத்தில் சாலையோரம் நான்கு சிலைகள் கிடப்பதாக அதே பகுதியை சேர்ந்த கணேசன் உள்பட 3 பேர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்த விளாங்குடி போலீசார் சிலைகளை மீட்டு, குருவித்துறை சோழவந்தான் கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். சிலைகளை பார்த்த குருவித்துறை மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story