முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை - 66 அடியை மீண்டும் எட்டியது வைகை அணை

வைகை அணை இன்று காலை 6 மணியளவில் 66 அடியை எட்டியது, இதனை தொடர்ந்து மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை - 66 அடியை மீண்டும் எட்டியது வைகை அணை
x
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், இந்த ஆண்டின் இரண்டாவது முறையாக வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டி உள்ளது. இன்று காலை 6 மணியளவில்  66 அடியை எட்டிய நிலையில், மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 69 அடியாக அணை நீர்மட்டம் உயர்ந்த உடன்  பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறக்கப்பட உள்ளது குறிப்பிடக்கத்தகது.


Next Story

மேலும் செய்திகள்