தீபாவளி பண்டிகையின் எதிரொலி : காட்டன் சேலைகள் உற்பத்தி பணி தீவிரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சக்கம்பட்டியில் உள்ள விசைத்தறி கூடங்களில் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 7 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தேனி மாவட்டம் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் உள்ளிட்ட இடங்களில் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெண்களை கவரும் வகையில் ஜோதிகா, கும்கி, கபாலி, ஜரிகை காட்டன், செட்டிநாடு பிளைன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட டிசைன்களில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிக அளவில் ஆர்டர் வந்திருப்பதால் பணி இரவு, பகல் பாராமல் நடைபெற்று வருவதாக தெரிவித்த நெசவாளர்கள், தீபாவளி பண்டிகை முடியும் வரை தடையின்றி மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story