ஜெயலலிதாவுக்கு 2016ஆம் ஆண்டு இருதய பாதிப்பா? : அப்பல்லோ மருத்துவரிடம் விசாரணை

ஜெயலலிதாவுக்கு 2016ஆம் ஆண்டு இருதய நோய் பாதிப்பு இருந்ததா என, அவரது பதவியேற்பு வீடியோ காட்சிகளை போட்டு காண்பித்து அப்பல்லோ மருத்துவரிடம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணை நடந்தது
ஜெயலலிதாவுக்கு 2016ஆம் ஆண்டு இருதய பாதிப்பா? : அப்பல்லோ மருத்துவரிடம் விசாரணை
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ தீவிர சிகிச்சை மருத்துவர் ரேமண்ட் நேரில் ஆஜராகினார். ஒருவரை பார்த்து அவருக்கு இருக்கும் நோய்கள் குறித்து கண்டறியும் நிபுணத்துவம் பெற்ற ரேமண்ட்டிடம் ஜெயலலிதாவின் வீடியோக்களை காட்டி கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்காக 2016ம் ஆண்டு அவர் பதவியேற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. 

அப்போது இந்த வீடியோவை பார்த்த டாக்டர் ரேமண்ட், 2016ல் ஜெயலலிதாவிற்கு இருதய நோய் இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். கூன் விழுந்த நிலையில் மெதுவாக நடந்து வந்த ஜெயலலிதாவுக்கு முதுகு தண்டுவடம் மற்றும் பாதத்தில் ரத்த ஓட்ட பிரச்சினைகள் இருக்கலாம் எனவும் டாக்டர் ரேமண்ட் தெரிவித்தார். மேலும் அப்பல்லோ மருத்துவர் கார்த்திகேசனும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்