சென்னையில் ரியல் எஸ்டேட் துறை தொடர்பான பயிலரங்கம் - மத்திய அமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு
ராணுவம் மற்றும் ரயில்வே துறையின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை தமிழக அரசிடம் வழங்கினால், ஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
* ரியல் எஸ்டேட் துறையில் நம்பக்கத்தன்மை மற்றும் வெளிப்படைதன்மை குறித்த பயிலரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ராணுவம், ரயில்வே துறையின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை தமிழக அரசிடம் வழங்கினால், இலவச வீடுகள் கட்டும் திட்டத்திற்கு பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
* பயிலரங்கத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் ஹர்தீப் பூரி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை தேசிய ஆணையத்தின் விதிமுறைகளுக்கும், தமிழகத்தில் உள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கும் பல வேற்றுமைகள் உள்ளதாகவும், இதில் சில திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
* ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின் அடிப்படையில், மாநில அளவில் செயல்படும் ஒழுங்கு முறை ஆணையத்திற்கு நிரந்தர தலைமையை நியமிக்க வேண்டும் என்றும்,மெட்ரோ ரயில் இரண்டாம் வழித்தடத்திற்கு நிதி ஆதாரம் பெற ஜப்பான் பன்னாட்டு நிதி முகமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்தார்.
Next Story