10 அறைகளில் 5,000 சிலைகளுடன் கொலு வைத்து வழிபடும் குடும்பம்
தசரா பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் தியாகராஜநகரில் உள்ள மரகதம் குடும்பத்தினர் 5 ஆயிரம் பொம்மைகளை கொண்டு, கொலு வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
43-வது ஆண்டாக கொலுவைத்து வழிபாடு நடத்தி வருகிறார் மரகதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வீட்டில் உள்ள 10 அறைகளிலும் 5 ஆயிரம் பொம்மைகள் உதவியுடன் கொலு அமைத்துள்ளார். பொதுவாக வீடுகளில் 5,7,9,11 அடுக்கு கொண்ட ஸ்டாண்டில் மட்டுமே கொலுவைப்பது வழக்கம் , ஆனால் மரகதம் வீடுமுழுவதும் கொலுவைத்துள்ளது வீட்டிற்கு வரும் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த ஆண்டு கொலுவில், புதிய வரவாக அஷ்ட பைரவர் சிலை, சப்த கன்னிகள், ராமாயாண கதையை விளக்கும் வகையில் சிலைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தாண்டு, தாமிரபரணி நதியை பாதுகாப்பது மற்றும் புஷ்கர விழா , ஒற்றுமையை வலியுறுத்துவது, மாமல்லபுரம் பல்லவர் காலத்து சிற்பங்கள் ஆகியவையும் கொலுவில் இடம் பெற்றுள்ளன. அயல்நாடுகளில் இருந்தும் பொம்மைகள் வரவழைக்கப்பட்டும் கொலுவில் இடம் பெறச் செய்துள்ள நிலையில், இந்த கொலுவை அமைக்க 15 நாட்கள் ஆனதாக தெரிவித்தனர்.
Next Story