சேலம் நீதிமன்றத்தில் சென்னை போலி வழக்கறிஞர் கைது

சேலம் நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் நீதிமன்றத்தில் சென்னை போலி வழக்கறிஞர் கைது
x
போக்சோ வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளி ஒருவருக்கு முன்ஜாமின் பெறுவதற்காக, சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் சேலம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜராகி உள்ளார். அப்போது, குற்றவாளிக்கு ஆதரவாக அவர் கொடுத்த பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட தகவல்களில் சந்தேகம் ஏற்படவே, இது குறித்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமகிருஷ்ணனிடம், வழக்கறிஞர் சங்கத்தினர் நடத்திய விசாரணையில், அவர் போலி வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. 

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் அஸ்தம்பட்டி போலீசார், ராமகிருஷ்ணனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்படிப்பு மட்டுமே முடித்த இவர் தன்னை வழக்கறிஞர் என்று கூறி பல நீதிமன்றங்களில் ஆஜராகி உள்ளதும், இதன் மூலமாக பல லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்