பெரும்பாலான கோயில்களில் அடிப்படை வசதி இல்லை - அறிக்கையை தாக்கல் செய்த மாவட்ட முதன்மை நீதிபதிகள்
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் அடிப்படை வசதி இல்லை என மாவட்ட முதன்மை நீதிபதிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அனைத்து மாவட்டங்களிலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் உரிய ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலி காட்சி மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்தபடி நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளியும் வழக்கை விசாரித்தனர். அப்போது கோயில்களில் அடிப்படை வசதிகள் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து எந்தெந்த கோயிலில் என்ன குறைபாடு உள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு
விசாரணை அக்டோபர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Next Story