ராஜராஜ சோழனின் 1033-வது பிறந்த நாள் : தஞ்சை பெரிய கோவிலில் பந்தகால் முகூர்த்தம்
ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி, தஞ்சை பெரிய கோவிலில் பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.
* 1000 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய சோழ மன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த தினத்தை, சதய விழாவாக ஆண்டுதோறும் தமிழக அரசு கொண்டாடி வருகிறது. அதன்படி, 1033வது சதய விழா, வரும் 19, 20 தேதிகளில் நடைபெற உள்ளது.
* இதையொட்டி, பெரியகோவில் வளாகத்தில் இன்று பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக, பந்தல் காலுக்கு திரவிய பொடி, மஞ்சள், பால், சந்தனம், உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. இதில், சதய விழா குழு தலைவர், அறநிலையத் துறை உதவி ஆணையர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story