புரட்டாசி மகாளய அமாவாசை : நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, தமிழகம் முழுவதும் மிகவும் புனிதமாக கருதப்படும் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டு வருகிறது.
ராமேஸ்வரம் :
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் :
புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளக்கரையில், அதிகாலையிலேயே 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இறந்த மூதாதையர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு பண்டங்கள், பழங்கள் படையலிட்டு, திதி கொடுத்தனர்.
கன்னியாகுமரி :
இதேபோல, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் ஏராளமான மக்கள் புனித நீராடி, இறந்த மூதாதையர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். பூஜை செய்த, அந்த பொருட்களை கடலில் கரைத்து முன்னோர்களை வழிபட்டனர். பின்னர், கடற்கரையில் உள்ள பரசுராம் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர், சர்வ தீர்த்தம் உள்ளிட்ட குளக்கரைகளில் குவிந்த திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர். மாவு பிண்டங்களை குளங்களில் கரைத்த பக்தர்கள், பசுக்களுக்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர்.
Next Story