அரசு சேமிப்பு கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்கில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் முதற்கட்ட பணி, பெங்களூர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெற்று நிறைவடைந்தது.
அரசு சேமிப்பு கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
x
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்கில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் முதற்கட்ட பணி, பெங்களூர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெற்று நிறைவடைந்தது. இதனையடுத்து  கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இயந்திரங்கள் பெட்டியில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டு கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் சீல் வைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்